வானவில்
வானுலகின் எட்டாத அதிசயமே...
மழை நின்றதால் வானில் குதூகலமே!
வண்ணங்கள் ஏழும் வளைந்திடுமே...
வானவில்லாய் வையத்தில் சிறந்திடுமே!
மறைந்த ஆதவன் மீண்டும் வர,
நிறைந்த வரவேற்ப்பை வான நங்கை தர ,
தோன்றுமே வண்ணவில் ஆக வானவில் !
மலர் அம்பை நான் தேடவே சற்று நில் !
வண்ணங்களின் கலவையாய் வானவில்!
எண்ணங்களின் கலவையாய் கனவில்..
நிழல் நிஜமாக மழை வேண்டும்!
நின்றபின் நிழலாய் வானவில் தோன்றும் !