பிழைப்புக்கு வழி தேடும் பிள்ளை
பிழைப்புக்கு வழி தேடும் பிள்ளையே
என் கதை கேட்க யாருமில்லையே...
சொந்த மண் இன்று தூரமானதே
தத்தெடுத்த மண்ணுக்கு தமையனாகியதே...
பணி தேடித்தேடி இவன் தேகம் தேய்ந்ததே
சோர்வும் சலிப்பும் இவன் அகராதி தொலைத்ததே...
தங்கைக்கு என்று சேர்க்கும் காலம் தொடருதே
என் காயமும் காயவில்லையே...
விதியோடு விளையாடி நடையாக தொடர்ந்ததில்
இவன் கனவுகளெல்லாம் ஓடித்துரத்துதே...
நினைவுகளால் சேர்ந்த இவனோ
தூரத்தினால் பிரிந்ததேனோ...
அறைக்கதவுகள் மூடி மூடி அழுகையை மறைப்பதேனோ
காதலியின் காதலும் உறவுகளின் பாசமும் காணத்தவிப்பதேனோ...
வாருசங்களெல்லாம் விருட்சங்களாக வளர்ந்து
மறுபடி மறுபடி வளர்வதேனோ...
தாய் அரவணைத்து தந்தை தண்டித்து
தம்பியோடு கைகோர்த்து மீண்டும் நடக்க நாள் வருமோ...
காலத்தோடு தோற்று இளமையில் பாதி துளைத்து
சொந்தமண் தேடிப்போன செல்வன் இவனே..