காலம்
அக்குடி கற்றோரை மேல் வருக என்றதும்
தக்கதோர் சிறப்பினை தந்ததும்
அந்தக்காலம்
எக்குடி கற்றாலும்எங்கு பொய் கற்றாலும்
தகவின்றி மாய்வது இந்தக்காலம்
சட்டமும் நியாமும் அரசாண்டது அந்தக்காலம்
பட்டமும் பதவியும் ஆட்டம் போடுவது இந்தக்காலம்
பொய்யும் புரட்டும் பாவம் என்றது அந்தக்காலம்
பொய்யும் புரட்டும் தகுதியை போனது இந்தக்காலம்
தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தது அந்தக்காலம்
தண்ணீர் பாக்கெட்டை காசுக்கு விற்பது இந்தக்காலம்
பசித்த வையிற்றுக்கு சோறு போட்டது அந்தக்காலம்
பசிக்க வேண்டி மாத்திரை தின்பது இந்தக்காலம்
அன்னசத்திரங்கள் கட்டி வைத்தது அந்தக்காலம்
அனைத்தையும் மூடி காம்ப்ளெக்ஸ் கட்டியது இந்தக்காலம்
பள்ளிகள் கட்ட இடம் தந்தது அந்தாகாலம்
பள்ளிகூடங்களை லாபத்தில் நடத்துவது இந்த காலம்