படகு

துடுப்புகள் இல்லா ஒரு படகு
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது
அலையில் ஆடி ஆடி
கடைசியில் கரையில் ஏறியது
மகிழ்ந்தது படகல்ல
படகுக்குள் பரிதவித்துக் கொண்டிருந்த
ஒரு பூனை
தாவிக் குதித்து தரையில் ஓடியது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Jan-16, 11:25 pm)
Tanglish : padaku
பார்வை : 235

மேலே