நிற்கிறேன் பாவமாக

நான் பெரிய காரியக்காரி அல்லவா
எதையும் நன்றாகச் செய்வேன் அல்லவா
எதிலும் முதல் என்ற பெருமை எனக்கு அல்லவா

இன்று அதற்கு ஒரு திகட்டல் ஏனோ
பால் பையை எடுக்க மறந்தேன் ஏனோ
என்றும் மறக்காதவள் இன்று மறந்தேன் ஏனோ .

அசந்தேன் சற்று நேரம் என்னுடைய உஞ்சலில்
வானரங் களுக்கோ ஏகக் கொண்டாட்டம் மரங்களில்
பூ னகளுக்கோ அடை விடக் கும்மாளம். மதிலில்


குரங்குகள் பாலை பியித்து உற்ற
பூனைகள் சப்பி நக்கி உறிஞ்ச
ஒரே ஆர்பாட்டம் வாசலிலே

எழுந்து ஓடினேன் வாசலை நோக்கி வேகமாக
ஐயோ என்று கத்தினேன் அழாத குறையாக
இன்று பாலும் இல்லை மோரும் இல்லை ஒரேயடியாக
நிற்கிறேன் பாவமாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (3-Feb-16, 8:10 pm)
Tanglish : nirkiren paavamaga
பார்வை : 784

மேலே