என்னை நேசி
பள்ளி முடித்து
கல்லூரி முடித்து
காசு தேடும் காரணியாக மட்டுமே பார்க்கப்படும் படிப்பு ,
காசு தேடியவுடன்,
முறிந்து விட்ட முதல் காதல் போல் ஏக்கம் கொள்ள வைக்கிறது.
காசு பின்னால் நேரம் தொலைத்து ஓடும் நமக்கு
கடைசி வரை தெரிவதில்லை,
புத்தகங்கள் காதலிக்கப்பட வேண்டியவை என்று!!