காதல் மன நோய்

உழைத்துக் களைத்தவன் ஏங்கும்
உணவுக் குவியலாய்
பார்த்த களிப்பில் தள்ளாடும் இளமைக் காதல் நினைவுகள்!

நெஞ்சில் பூத்த நஞ்சு மலராய்
நினைவுக் காதல் தோல்விகள்!

மனங்கள் கலந்து மணத்தில்
முடிந்தால் காதல் ஒரு வெற்றிக் கொடி!
ரணமாய் பிரிந்து கனமாய் கதறும் மனங்கள் கண்ட அடி!

காதல் என்பதே மன நோய்
காத்திருந்து காலம் கடந்தால்
காணாமல் போய் தானே சரியாகும்!

எழுதியவர் : கானல் நீர் (6-Feb-16, 2:06 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : kaadhal mana noy
பார்வை : 210

மேலே