மரம்

மரம்
நெடுநாள் வாழ்ந்த பட்ட மரம் அது
என் முகத்தை போலவே மரம் எங்கிலும்
முதுமையின் கோடுகள்
நினைவில் உள்ளது அன்பு மகனே
இது என் தந்தை கூறி நான் நட்ட மரம் ....

உன் பிஞ்சு கரங்கள் பிடித்து நீ நட்ட மரம்
நீ வளர மரமும் வளர்ந்தது
மரம் கனி கொடுக்கும் சமயத்தில்
நீ மணமாகி பிள்ளையை பெற்றாய்..
என்னை விட நீ பேரும் புகழும் அடைந்த சமயத்தில்

என் மனம் எங்கும் சந்தோஷ பூக்கள் பூத்தன..
இருந்த வீடு பற்றாது என்று நீ
அடுக்கு மாடி கட்டையில்
அழகு பொருந்திய உன் வீட்டிற்கு
பூஜை அறை அலங்கரிக்க
நாள்பட்ட மரம் தேடி கிடைக்காமல் போகவே

மகனே நான் நட்ட மரம் வெட்டி அலங்கரிந்தாய்
போகட்டும் விடு வயதான நான் உனக்கு
உபயோகம் இல்லாமல் முதியோர் இல்லம் இருக்கையில்
வயதான நான் நட்ட மரம் உனக்கு உதவியதில் எனக்கு பெரு மகிழ்ச்சி
நினைவில் கொள் .....நீ நட்ட அந்த மரத்தை பத்திரமாய் பார்த்து கொள் ...!

எழுதியவர் : ந வா பிரபு (8-Feb-16, 9:56 pm)
சேர்த்தது : ந வா பிரபு
Tanglish : maram
பார்வை : 1882

மேலே