காதல் கிறுக்கி ஆகி போனேன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏழுமணிக்கு எழுந்திருக்க
இறைவனிடம் கேட்கிறேன்
முன்னர் எழுந்து முனங்க முடியவில்லை
ஏனெனில் அவன் வரும் நேரம் அது
கலங்கிய கண்களுக்கு ( குழந்தைகளுக்கு )
அதிகாலை பால் ஊத்தும் பணி
அவன் தான் என் கண்மணி
காணாமல் நான் துடித்து போகிறேன்
எப்-ம் -ல் என் பெயர் கேட்க கேட்டேன்
அது அவன் கொடுத்த தகவல் அறிந்தேன்
அவன் எனக்காக பிறந்ததை அறிவேன்
அவன் கேட்டால் என் உயிரையும் தருவேன்
என்னில் உள்ள பாசம் என்பேன்
அது இந்த உலகில் வேறெங்கும்
அறவே இல்லை என்பேன் - அவன்
இல்லா நான் இல்லை என்பேன்
இன்றும் காண்கிறேன் என்னவனை
இன்னுமே காதலிக்கிறேன் - அரிதாய்
அவனுக்கும் சொல்லாமலே - பெரிதாய்
எனக்குள் மறைக்காமலே இதயத்தை
கைகள் வெட்டி கொள்கிறேன் - இன்று
அவன் கைகள் இன்னொரு பெண்ணோடு
தினமும் இதயம் நொறுங்கி போகிறேன்
அவன் உள்ளம் இன்னொரு கண்ணோடு
இன்னுமே காதலிக்கிறேன் இனியும்
சொல்லாமலே சுவாசிக்கிறேன் - அவனை
எண்ணி எண்ணி வாழ்கிறேன் - அவனால்
காதல் கிறுக்கி ஆகி போனேன் .