நிலவாக நீ இருந்தால்

நிலவாக நீ இருந்தால் மேகமாய் நான் இருப்பேன்
உன் அழகை மறைக்க அல்ல உன்னைப் பாதுகாக்க!

அருவியாய் நீ இருந்தால் பாறைகளாய் நான் இருப்பேன்,
உன்னை தடுப்பதற்காக அல்ல, உன் கொலுசொலியை வெளிக்காட்ட!

காற்றாய் நீ இருந்தால் புல்லாங்குழலாய் நான் இருப்பேன்,
குழலில் உன்னை அடைப்பதற்காக அல்ல, உன் இனிய குரலை பரப்புவதற்காக!

மழையாய் நீ இருந்தால், மரமாய் நான் இருப்பேன்,
என்னுள் உன்னை சேர்ப்பதற்காக அல்ல, என்றும் உன்னை தாலாட்டுவதர்க்காக!

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (8-Mar-16, 11:16 am)
பார்வை : 199

மேலே