நீங்காதே பெண்ணே

நீங்காதே
பெண்ணே.....
தூங்காதே
என்
கண்ணே.....

நிழல் அல்ல
நீ....நிகழ்கால
நிஜம்.....
நீண்டகாலம்
வாழ்வோமே.....

உன் பெயர்
சொல்லும் போதே
உள்ளுக்குள்ளே
ஏதோ
என்னைக் கொல்லுதே.....

அந்த
வலி தந்தவளே
வாழ்ந்திட
ஆசையடி உன்னோடு.....

இல்லையெனில்
வாழ்ந்தென்ன
சுகமென்று
இந்த வாழ்க்கையை
வெறுப்பேன்.....

உன் தண்டனையின்
கைதியாகினேன்.....
இதயச் சிறையில்
இயன்றவரை
அடைத்துவிடு.....
இல்லையெனில்
அழித்துவிடு......

உருகி உருகி
காதலித்தேன்.....
உன்னுருவம்
பார்த்தே.... என்னுருவம்
உருக்குலைந்தேன்....

உலகெல்லாம்
சுற்றவில்லை
உலகமே
நீதானென
உன்னோடு
உன்னினைவோடு
இருந்தேனே.....!?

எனக்கொரு
ஜீவன்
இவ்வுலகில்
உனையன்றி
யாரடி....?
இருந்தால்
கூறடி.....?

அலை விளையாடும்
கடலில்
கவலை
மறந்து
விளையாடிய
பொழுதுகள்
வீண் அல்ல.....விட்டுப்போகாத
வலி சுமக்கும்
இந்த நிமிஷ
வாழ்க்கையின்
இறுதி வார்த்தைகள்
ஆனதே......!!!

எழுதியவர் : thampu (14-Mar-16, 6:38 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 128

மேலே