நீலக்கடல்

ஆழ்கடலின் அமைதியே
ஆரவாரப் பெருங்கடலே
நீலவானின் பிம்பமே
நெய்தல் நிலத்தின் நாயகனே..!

தரை தவழும் தெப்பமே
கரை மீறும் சர்ப்பமே
உணர்ச்சியின் பெருவெள்ளமே
அந்தி மாலை மயக்கமே..!

காதல் கடலே
கவிக் கடலே
சோகமும் இழையோடும்
சுதந்திரப் பெருங்கடலே..!

கரை ஒதுங்கும் சிப்பிகள்
நுரை துப்பும் அலைகள்
சிறை போகும் நினைவுகள்
கடற்கரை மேயும் கால்கள்
சிரித்திருக்கும் இதழ்கள்
பார்வை மேயும் பண்டங்கள்
அத்தனையும் அழகே..!

ஆயினும் உன்
இரவுக் கண்களை மட்டும்
கொஞ்சம் வெளிச்சமாக்கு..!

உன் கடற்கரை வாசிகள் மீதும்
கொஞ்சம் இரக்கம் காட்டு..!

எழுதியவர் : (15-Apr-16, 10:51 pm)
Tanglish : neelakkadal
பார்வை : 184

மேலே