கண் கொள்ளாக் காட்சி
கயிலை மலையிலே
பனி வாசம் வெகுவாக
வெள்ளிமலை சாரலில்
அழகாக மின்ன
வெள்ளிப் பனி
பாறையெல்லாம்
கனிந்து நிரம்ப
கண் கொள்ளாக்
காட்சி கண் நிறைய.
குளிரும் பனியில்
கதிரவன் எழும்ப
இருட்டும் வெளிச்சமும்
விட்டும் விடாமலும்
மப்பும் மந்தாரமுமாக
வெண் போர்வை
மெல்ல மெல்ல விலக
கண் கொள்ளாக்
காட்சி கண் நிறைய.
வெளிறிய போது
மஞ்சள் முகத்தான்
பட்டும் படாமலும்
பகட்டும் பகட்டாமலும்
அசையாமல் மௌனமாக
வெளி வரும் தோற்றம்
மனதிற்கு ஈடொ ன்னா
அமைதியை நல்க
கண் கொள்ளாக்
காட்சி கண் நிறைய.