முரணாய்

தன்வசப்படுத்தும் முயற்சியில்
தந்திரத் தகிடுதித்தங்கள்

எனக்கு எனக்கு
என்பது
எப்படியோ கசிந்துவிடுகிறது
யார் கவலைப்பட்டார்கள்?

நாள் கடத்துவது
மலை புரட்டுவதாய்
மலை புரட்டுவது
எறும்படிப்பதாய்
முரணாய் முரண்டும்
வாழ்க்கை.

எழுதியவர் : கனவுதாசன் (16-May-16, 1:48 pm)
பார்வை : 52

மேலே