உயிர் காத்த நாயகர்கள்

வெடிச் சப்தம்,
வீதியெங்கும் புழுதி மயம்!

தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்,
அல்லோல கல்லோலம்!

கட்டிடங்கள் அதிர்ந்தன,
வாகனங்கள் வெடித்துச் சிதறின!

எங்கெங்கும் கூக்குரல்,
நானும் எங்கோ ஒரு மூலையில்!

அவசர வாகனத்தின் சங்கொலி,
தீயணைப்பு வாகனத்தின் மணியொலி!

செவிலிய உதவியாளர்களும்
ஆபத்துதவி தீயணைப்பு வீரர்களும்,

கைகளில் அள்ளித் தூக்கினார்கள்
என்னையும் மற்றும் காயம் பட்டோரையும்,

எங்கள் உயிரைக் காப்பாற்ற
மருத்துவமனையில் சேர்த்தார்கள்!

செவிலிய உதவியாளர்கள், தீயணைப்பு வீரர்கள்
எங்கள் உயிர் காத்த நாயகர்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-16, 8:09 am)
பார்வை : 433

மேலே