கவிதை நதி

நகராத நதியது
தாள் மீது தவழ்ந்தாலும்
ஏடுகள் நனைவதில்லை
நீரின்றி ஓடினாலும்
உள்ளங்கள் நனைகின்றது
மலைத்தொடரில் வழிவதில்லை
பேனா மையில் வரிவரியாய்
வடிந்தோடி வந்து பாய்கிறது
உணர்வுகளின் கற்பனையாக
ஊமை இதயங்களின் குரலாக
கவிதை பிறக்கிறது
கவிஞனின் தத்துக் குழந்தையாக!!!

எழுதியவர் : தாமரை (25-May-16, 9:40 am)
Tanglish : kavithai nathi
பார்வை : 147

மேலே