வாழ்வதற்கே வழியில்லே

நெஞ்சடைக்கும் பசி
தீர்ந்துபோன கண்ணீர்
வாட்டியெடுக்கும் வறுமை
நிறுத்தத்துடிக்கும் இதயம்

கறுத்துப்போன உடல்
வெறுத்துப்போன மனம்
வறண்டுபோன வாய்
தளர்ந்துபோன வாழ்க்கை

தீர்ந்துபோன இரக்கம்
படுத்திவைக்குது மயக்கம்
வாழ்க்கையிதுவா சொர்க்கம்
என்றுகிடைக்குமோ தூக்கம்

தூக்கத்துக்கே வழியில்லே
இதில் கனவுக்கெங்கே போவது
வாழ்வதற்கே வழியில்லே
இதில் கனவெங்கே காண்பது..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Jun-16, 7:19 pm)
பார்வை : 833

மேலே