அழகே அழகாய்

வெண்மேகத்தில்! பிரம்மன்...
பதித்த முத்து எழுத்துக்கள்!
வளமை கொழிந்த ...
மகசூலேன!
ஆர்ப்பரித்துக் கொட்டும்...
கருப்பு அருவித்துளிகளான...
கார்மேக கூந்தல் அழகு!

ஆகத்தில் பூத்து...
அழகாக்கும் ஜவ்வந்திகள்!
போல, கூந்தலில்...
மணம்வீசும்
மல்லிகைப்பூக்கள்...
மரண அழகு!

பறந்து விரிந்த
ஆழியில்!
சில்லு சுழியாய்!
நெற்றியில் பொட்டழகு!
துணுக்கு அலையாய்...
நெற்றியில் வீற்றிருக்கும்...
திருநீர் தீரா அழகு!

மயில்த்தோகையின்
தொகுப்பில், குயிலின்...
சாயல் கருப்பை!
தோரணையாய்...
வகுத்த இருபுருவம்
அழகு!

இறகை விரித்தாடும்!
பட்டுப்பூச்சியாய்!
இமை திறக்கும்...
தோரணை! அழகு!

மயில்கொண்டையின்...
மாய அழகை!
தன்வசப்படுத்திய...
இமைமுடிகளும் அழகு!

மரகதச் சோலையில்!
மதன முத்தமிடும்...
மலர் கிடங்குகலான
இரு நேத்திரங்கள் அழகு!

நேத்திரத்தில்!
கருப்பு பிறை...
சூல்கொண்ட
கருவிழிகளும்!
வான அழகு!

செப்புத்தகட்டை உருக்கி!
செங்கமலர் இதழாய்!
செதுக்கிய...
செவிகளிரண்டும் அழகு!

அதில்...
தென்றல் உரசி!
தேகம் சிலிர்த்து!
பரதம் ஆடும்...
காதணி கொள்ளை அழகு!

நிலவில் கோர்த்த
மின்மினிப்பூச்சாய்...
மின்னும் மூக்குத்தி!
முத்தழகு!

திகட்டாத அறுசுவையும்!
எட்டாத அமுதசுவையும்!
தன்னுள் அடக்கி...
நாவூரச் செய்யும்!
தேனூரும்!
அரத்திப்பழ உதடுகள்!
அற்புத அழகு!

முத்துப்பற்கள் வரிசையில்...
மோகக் குண்டுகளை!
தேகத்தில் துளைத்திடும்!
அவள் தெத்துப்பல்!
தேனழகு!

திராவிடனின் திடமான
நெஞ்சையும்...
திக்குமுக்காட வைக்கும்
இவள் சிரிப்பின்
தித்திப்பு!
சீமை அழகு!

அச்சில் வார்க்கப்பட்ட...
பனைவெல்ல
கன்னங்களை!
அணுஅணுவாய்...
கடித்துண்ணும் அவள்...
நேற்றிமுடிகள் அழகு!

ரோஜா இதழ்களிலுள்ள,
பனித்துளிகள் போல...
இவள் வதனத்தை
ஸ்பரிசமிடும் பருக்கள்...
அனைத்துமே பருவ அழகு!

கலை மான்களை!
வசீகரிக்கும்...
புள்ளிகளின் மிச்சம்!
இவள் உதட்டோரத்தில்...
உதிர்ந்த மச்சம்!
மாய அழகு!

தேன்கிண்ணத்தில்...
விழுந்த,
அமுததுளியாய்!
தோன்றும் கன்னக்குழி!
காணக்கிடைக்காத
அழகு!

பட்டுநூலை...
தங்கத்தகட்டில் கோர்த்த,
பஞ்சவர்ணகிளியின்!
கழுத்து அழகு!

வாசனைத் திரவியங்கள்!
சருமத்தில் சங்கமிக்க!
ஆகச்சிறந்த...
இவள் தேகத்தில்
பொழியும் தேன்ச்சாரல்கள்!
அழகு!

தேன்ச்சிட்டுக்கள் மொய்க்கும்...
தேகத்தில்...
கோடிக்கணக்கான
வான்ச்சிட்டுக்கள் அணிவகுத்து!
வர்ணங்களின் அமோக...
விளைச்சலை அறுவடை...
செய்யும் ஆடைகள்!
அதீத அழகு!

தேனமுதுகளை திரட்டி!
பாலமுதுகளை பதுக்கி!
பூபொழிதலில்...
இமயம், பொதிகையின்...
மகத்துவத்தை இணையாக
படைத்த மார்பகங்கள்...
மட்டற்ற அழகு!

கண்ணிற்கு உரைநடை...
கற்பித்து!
கவிக்கோர்
சரணாலயமாய்!
காட்சியளிக்கும்...
சிறிய கனி இடை...
இன்ப அழகு!

நாதஸ்வரங்களுக்கு...
இணையாக!
பாதஸ்வரங்கள் பாடும்!
இவள் பாதக்கொலுசு!
பால் அழகு!

ஆகமொத்தம்!
இவள்...

பிரம்மன் எனும் சிற்பி!
இயற்கையெனும்...
பாறையை!
அழகெனும் உளியை...
கொண்டு செதுக்கிய...
சிங்காரச் சிலை அவள்! என்னவள்!

எழுதியவர் : maniaraa (15-Jun-16, 1:32 am)
பார்வை : 1410

மேலே