கருச்சத்து, கருச்சத்து

தாத்தா நானும் பாத்துட்டு இருக்கறென் அர மணி நேரமா வாசப்படில்ல நின்னுட்டு கருச்சத்து, கருச்சத்து-ன்னு சொல்லி சத்தம் போட்டுட்டே இருக்கறீங்க. முட்டை கருவுல புரதச் சத்து நெறையா இருக்குன்னு சொல்லறாங்க. அதத்தாஞ் சொல்லிட்டு இருக்கறீங்களா?

@#@
பக்கத்தூட்டு பங்கசம் (பங்கஜ் = தாமரை) எம் பேரன் கருச்சத்தை அர மணி நேரமா காணம். அவனத்தாம்மா அர மணி நேராமா கூப்புட்டுட்டே இருக்கறன்.
#@#
உங்க பேரன் ஹர்ஷத்- தையா?
@#@
அது என்ன சத்தோ. அவன எங்கயாவது பாத்தயா?
###
தாத்தா, ஹர்ஷத் -து எந் தம்பி ஹர்ஷன்-ங்கூட வெளையாடிட்டு இருந்துட்டு எந் தம்பிகூடவே தூங்கறான். தாத்தா.
#@#
எம் பையன் பாண்டியனும் மருமக பூங்கொடியும் டாக்டர் பட்டம் வாங்கிட்டு தமிழ்ப் பேராசிரியர்களா இருக்கறாங்க
படிச்ச பதருங்க. எம் பேரனுக்கு தமிழ்ல நல்ல பேரா வைக்கத் துப்பில்லாம இந்திப் பேரா வச்சிருங்காங்க. இவுங்க மாதிரி மொழிப்பற்று இல்லாம அரகொறயா வயித்துப் பொழப்புக்காக படிச்சவங்களால தான் நம்ம செம்மொழிக்கே சீரழிவு.
@%@
அவுங்கள கொற சொல்லாதீங்க தாத்தா. ஊரோட ஒத்துப்போறாங்க.
##@
பக்கத்தூட்டுக்காரன் 1000 ரூபாய்க்கு பட்டாசு வெடிச்சா இவுங்க 5000/- ரூபாய வெடிச்சு கரியாக்கறவங்கதானே. கைநாட்டுக்கும் டாக்டர் பட்டத்துக்கும் ஒரு வித்தியாதமும் இல்லம்மா பங்கசம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (6-Jul-16, 11:26 pm)
பார்வை : 127

மேலே