வேண்டும்

உனை பார்க்கும்
போது மட்டும்
ஒடாமல் நிற்கும்
கடிகார முள் வேண்டும்

உனை கடக்கும்
போது மட்டும்
கோடி கண்கள்
வேண்டும்

உனை பற்றி
எழுதும் போது மட்டும்
வரைமுறை இல்லா
மொழிகள் வேண்டும்

உனை உரசும்
போது மட்டும்
காற்றுக்கு
வரைமுறை வேண்டும்

உனை நான்
மட்டும் சேரும்
அந்த நாள்
முடிவாக வேண்டும் ...

எழுதியவர் : கிரிஜா.தி (11-Jul-16, 10:10 pm)
Tanglish : vENtum
பார்வை : 77

மேலே