அவள் பறவைகள் சாதி
தண்ணீரில் பாலை
பிரித்து உண்ணும்
அன்ன பறவை....
என்னில் இருந்து
என் காதலை
பிரிக்கும்
நீ என்ன பறவை.....
மழை வந்தால்
தோகை விரிக்கும்
வண்ண மயில் ...
நான் வந்தால்
உன் அழகை
ஒளித்துக் கொள்ளும்
நீ எந்த நாட்டு மயில் ....
மரத்தில்
அமர்ந்து அழகாய்
பாடும் குயில்.....
என் மனதில்
அமர்ந்து ஊமையானதோ
இந்த குயில் ....
இரை தேடி
பறந்து செல்லும்
பருந்து ....
ஏன் எனை தேடி
ஒடி வரவில்லை
இந்த பருந்து ....
கா என்று
கத்தியவுடன் வந்தது காக்கை
வா என்று
கத்தியும் வரவில்லை
இந்த காக்கை ...
மரத்தை கொத்தி
வாழும் மரங்கொத்தி
என் மனதை கொத்தி
வாழும் நீ
மனம் கொத்தி .....
நீ உயர பறக்கும்
பறவைகள் சாதி
நான் உனை அன்னாந்து
பார்க்கும் மனிதர்கள் சாதி .....