மனம்

நன்றே குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்,
ஓடித் தெரு சென்று வேண்டா வேலைகள் செய்யும்...
சந்தனத்தை பூசி, உடலெங்கும், பின்னே,
சாக்கடை தண்ணீரில் களிப்புடன் தலை குளிக்கும்...
துறவியாய் ஆயிரம் தவங்கள் செய்தும்,
அரக்கனாய் மாற தருணங்கள் பார்க்கும்....
குழந்தையாய் பழக்கி வைத்திருந்தாலும்,
கொடியனாய் தன் இன்னொரு முகம் காட்டும்....
நண்பனாய் எப்போதும் நினைத்திருக்க
நடுவிலே கைவிட்டு சிரித்துடும் துரோகியாய்...
கடவுள் கொஞ்சமாய் மிருகம் மொத்தமாய்
மனித வாழ்க்கையில் இந்த மனம்.