மனதோடு பேசுகிறாய்

மனதோடு பேசுகிறாய்...!
மனதோடுப் பேசுகிறாய்
மந்திரப் புன்னகை வீசுகிறாய்
பொன்மேனி வெண்ணிலவாய்
பகலவன் எனையே காய்க்கின்றாய்
வந்தனம் தீண்டி உறவாடிட வேண்டாம்
மதனன் எனை உருவகித்திட வேண்டாம்
இதயங்கள் இடம் மாறியப் பின்னும்
இதழ் சேர்த்து முத்துதிர்த்தால் என்ன...?
கபடமாய் நீ கருவிழி மூடினும்
காரிகை உன் பீடிகை அறிவேன்....
கிரி வலம் சுற்றும் எந்தன் ஆசைகள்
வரித்திடும் உந்தன் இதய ஓசைகள்....
பொழுதில் புலர்ந்த புது நிலவாய்
பொழிந்து வருவாய் அருகில்!
கருவில் சுமக்கும் உயிராய்
காரிகை உன்னை சுபித்திடுவேன்!
கவிதாயினி அமுதா பொற்கொடி