மறந்து போகிறோம்
நாம் நினைத்துப் பார்ப்பதில்லை
நாம் மறந்து போகிறோம்
அதே அவன்/அவள் தான்
நேற்று சிரித்து பேசியது
அதே அவன்/அவள் தான்
நம்முடன் விளையாடியது
அதே அவன்/அவள் தான்
இனிப்புகளை பகிர்ந்து கொடுத்தது
நாம் நினைத்துப் பார்ப்பதில்லை
நாம் மறந்து போகிறோம்
ஏதோ ஒரு மனஸ்தாபம்
ஏதோ ஒரு நாள் வந்துவிட
மற்ற நாட்களை மறந்து போகிறோம்
மற்ற இன்பங்களை மறந்து போகிறோம்
மற்றவன் என ஒதுக்கி போகிறோம்
கைதட்டி மகிழ்ந்தவனையே பார்த்து
கைகொட்டி சிரிக்க நினைக்கிறோம்
நேரங்கள் ஓடும்
கால்கள் வலுவிழக்கும்
கைகள் நடுக்கம் கொள்ளும்
அன்று மனது குண்டூசி எடுக்கும்
தனிமைகள் நரகமாகும்
மறந்தவன் நினைவு வரும்
காலம் கைகொட்டி சிரிக்கும்
நாதியற்ற அந்நாள்
அனைவருக்கும் ஒரு நாள் வரும்
மறந்ததை நினைவூட்ட