நீயும்நானும்
நீயும்... நானும் ...
நிஜமும்... நிழலும்....!!
நமக்கு உவமையாய் இவற்றை நான் கொள்வது தவறா....??
இருளில் நிழல் நிஜத்தைவிட்டு விலகிவிடும் என்று மனிதம் கொள்வது சரியா....!!
இருளில் நிழல் கண்களுக்கு புலப்படுவதில்லையே தவிர
அது என்றும் நிஜத்தைவிட்டு விலக்கியதில்லை ....!!
என் அருகில் நீ இல்லை என்றாலும் என்றும் நீ என்னை விட்டு விலக்கியதில்லை ....
என்றும் என்னை பின்தொடர்ந்தாய் நினைவாய் ....!!
இரவோ... பகலோ...
குளிரோ.... பனியோ....!!
நேற்றோ.... இன்றோ....
அருகிலோ.... நினைவிலோ....!!
நிஜமும் நிழலும் பிரிந்ததில்லை .....!!
என் நிஜம் நீ...
என்றும் நிலைத்திருப்பாய் ....!!
உன் நிழல் நான்.....
என்றும் பின்தொடர்வேன்...!!
உலகம் இருளாகட்டும்....
கண்களுக்கு புலப்படவேண்டாம்....
நிஜமும் நிழலுமாய்....என்றும்
நீயும்....நானும்....!!