எங்கே காதல்
கண்ணாலே கண்டேனே
கட்டழகு மேனி... மனதுக்குள்
வருமோ காதல்...
உன் விரலும் என் விரலும்
பட்டால் வருமோ காதல்...
உன் உதடும் என் உதடும்
முத்தமிட்டு கொண்டால்
நிலைக்குமா காதல்...
பூக்களை உறிஞ்சும் தேனீ
போல் உன்னை மொய்த்தல்
பிறக்கமோ உனக்குள் காதல்...
விழியில் தொடங்கி இதயம்
வரை நீடிக்கும் காதல்
இல்லையோ இனி...
வருமோ இனி காதல் இதயம்
இல்லா கட்டழகி மேனி
உடையவளிடம்...
ஏன் வருவதில்லை வெண்மை
இதயம் கொண்ட
கார்மேக வண்ண மேனி
கொண்ட பெண்ணிடம்...