நாத்திகன் தூக்கிய சப்பரம்
சிற்றூரில்
சின்னக் கோயில்
சாமி புறப்பாடு
சின்னச் சப்பரம்
சப்பரம் தூக்க
நாலாவது ஆளில்லை
நண்பன் நாத்திகன்
தோள் கொடடா என்றேன்
கொடுத்தான்
நாத்திகம் நெஞ்சில் கனக்கவில்லையா
என்றேன்
நாத்திகமும் நெஞ்சில் கனக்கவில்லை
தூக்கும் உன் சாமியும் தோளில் கனக்கவில்லை
உற்ற நண்பனின் நெஞ்சு கனக்கக் கூடாதே என்று
உதவினேன் என்றான் !
----கவின் சாரலன்