ஒரு பக்கக் காதல் கதை பாகம் -08

------------------------------அவளும் அவனும் அவனால் அவன் நண்பனும்-------------------------
அவன்:(கையில் ரோஜாவுடன்): உன்னோட கேரக்டர் முக்கியமா உச்சபட்ச கோவம், மகிழ்ச்சி, சோகம், அழுகை இது எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கொடு ...ஏதோ ஒரு எலக்ட்ரிக் பல்ஸ் தான் அன்னிக்கு என்ன உன்னோட டேபிளை நோக்கி இழுத்தது..அது உன் அழகா இருக்கலாம், வெளிபுறத்தோற்றமா இருக்கலாம், அந்த எலக்ட்ரிக் பல்ஸ மேல எனக்கு நம்பிக்கை இல்ல..ஒரு வாரம் உன்னுடைய நாட்கள்ல உன்னோட வாழணும்..ஒரு வாரம் அது போதும்
அவள்: இதென்ன ப்ரொபோசலா ? அதென்ன ஒரு வார கணக்கு ? அதுக்கப்புறம்?
அவன்: ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணனுமா? ஏன் பெர்மிஷன் கேக்ககூடாதா?
அவள்: அப்போ என்கிட்டயே பெர்மிஸ்ஸின் வாங்கிட்டு என்னையே பாலோவ் பண்ணப்போற..முதல் தடவ ஒரு பைய்யன் ஒருபொன்ன பாலோவ் பண்ண பெர்மிஷன் கேக்குறான் ..நல்ல முன்னேற்றம் ..
அவன்: உனக்கு ஒரு மாதிரி இருந்துதுன்னா தம்பி/அண்ணன் அதுவும் ஒரு மாதிரி இருந்துதுன்னா சீன நாட்டுக்காரன்..உன் இஷ்டம் ..மாறுவேஷம் ரொம்ப செலவாகாது
அவள்: நா ரெகார்டிங் தியேட்டர் போறேன்..நேரம் இல்ல..எனக்கூறி..அரை இறுதியில் சிறு புன்னகை உதிர்த்து சென்றாள்
நண்பன்: எங்கடா போற ? அவ ஒண்ணுமே சொல்லலையேடா ?
அவன்: புன்னகை காதலுக்கு மட்டும் சரின்னு அர்த்தமில்ல சகோ (எனக்கூறி புன்னகையுடன் நகர்தான் அவளை பின்தொடரி)