முதல் கடவுள்

இந்தப் பூமி
என்னைத் தாங்க முதல்
தன் கருவில்
என்னைத் தாங்கிய தாயே
என் முதல் உலகம்...!
என் கால்கள்
நடக்க வழி தந்த
பூமியை விட
என் உயிர் துடிக்க
தன் உதிரத்தை எனக்கு
உணவாகத் தந்த
என் அம்மாவே
என் முதல் கடவுள்...!

எழுதியவர் : சி.பிருந்தா (2-Oct-16, 2:45 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : muthal kadavul
பார்வை : 285

மேலே