கவியரசு அரசிங்காரவடிவேலன் அஞ்சலி
வாயாற மொழி தந்து,
வளமான தமிழ் தந்து,
உன் கவிதைகள் ஏறாத இடமில்லை.
கவியரங்கங்கள் நிலை நிற்க,
மாறாத புகழ் கண்ட பேராசான்.
தமிழ் தந்த வேலனுக்கும்,
இதழ் முறுவல் தரும் பாட்டால்,
நாளும் புகழ் மாலை படைத்திட்டாய்.
உந்தன் தமிழ் கேட்கவே
தன் பெயரையே தந்து அழைக்க வைத்தவன்
அந்த முருகன்.
என்றென்றும் தமிழ் போலவே
உந்தன் பெயர் நிலைக்கும்,
புகழ் நிலைக்கும்.