பிடித்த பாடல் வரிகள் - மழை மகள்

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் வானம் பார்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னாள் இங்கே யார் அறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னை மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடிஎன்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே ...

எழுதியவர் : (20-Oct-16, 6:47 pm)
பார்வை : 802

மேலே