யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எழுதியவர் : கீர்தி (2-Jul-11, 12:15 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 320

மேலே