ஓடக்கற ஓரத்திலே

ஓடக்கற ஓரத்திலே
ஒத்த பனைமரம்....அத
பாக்கும்போது தினந்தோறும்
ஒன்நெனப்பு வரும்
நம்ம தெருவோர மூலையில
குட்டி செவத்த தோரம்...நான்
கொடுகிழிச்சு எழுதும்போது
ஒம்பேறுதான் நினைப்பில் வரும் ( ஓடக்கற )

செங்குளத்து மண்ணெடுத்து
செஞ்சு வச்சேன் உன்னழகை
வடிவாய்க்கா மண்ணெடுத்து
வரைஞ்சு பார்த்தேன் உன்னழகை
கோலிக்குண்டு கண்ணழகி
குதிரைவாலு சடையழகி
நூலுக்கண்டு போல ஒண்ணா
சுத்திவச்சேன் மனசுக்குள்ள ( ஓடக்கற )

ஏரியில் ஓரிபோட்டு
நீயும் நானும் குளிக்கையில்
மீதி நேரம் சேலைபோட்டு
மீனு வாரி ரசிக்கையில
கெளுத்தி முள்ளு குத்துச்சுன்னு
கதறி நீயும் துடிக்கயில
ஓம்முகத்தை பார்த்துப்புட்டு
எம்மனசு தவிக்கையில ( ஓடக்கற }

எழுதியவர் : இரா .மாயா (1-Nov-16, 6:31 pm)
பார்வை : 48

மேலே