ஊருக்கு வா மச்சான்

வான்மேகம் கருக்கையிலே...
மயில்தோகை விரிக்கையிலே...
பூவான பூங்குருவி ஒன்னத்தான் தேடிவந்தேன்...
பூவாக மச்சான தலையில சூடிநின்றேன்...
செங்கரும்பு சாரெடுத்து நீ கொடுக்க
செவ்விளனி நீராட்டம் நான் குடிச்ச
காலம் இப்ப கனவவாக ஓடுதய்யா......


தூர தேசம் நீ போகையில...
தூறல் போல கண்ணு அழுததே...
தூங்காம பகலிரவா நெதம் முழிக்குதே......
சேத்து வச்ச ஆச எல்லாம்
நாத்தப் போல மனசுல நட்டுருக்கேன்...
எப்ப மச்சான் நீ வருவெ
ஓடாத ஓடம்போல ஒனக்காக தவமிருக்கேனே......


மல்லிகப்பூ பந்தலிலே மனசுதான் படந்திருக்கு
மச்சான் ஓன் பேரச் சொல்ல
என்னுடம்பு புல்லரிச்சு பூவாக பூத்திடுச்சே......
நெத்தியில நீ வச்சப் பொட்டு
நெலவு போல நெதம் தேயுதே...
நெடுந் தூரம் நீ இருந்தாலும்
நெஞ்சோரம் ஓன்நெனப்பு வந்து தாலாட்டுதே......

எழுதியவர் : இதயம் விஜய் (27-Nov-16, 10:58 pm)
Tanglish : oorukku vaa machan
பார்வை : 179

மேலே