விழிகளில்லா காதலா

விழுப்புண் இல்லா வெற்றிகள் ஏது
வேர்கள் இல்லா மரங்கள் உண்டோ
தழும்புகள் இல்லா உழைப்பும் ஏது
தளிர்கள் இல்லா செடிகள் உண்டோ

தடைகள் இல்லா பாதைகள் ஏது
தருக்கள் இல்லா சோலையும் உண்டோ
உடைவாள் இல்லா வீர்ர்கள் ஏது
உண்மை இல்லா அன்பும் உண்டோ

விண்மீன்கள் இல்லா வானம் ஏது
விதைகள் இல்லா விருட்சங்கள் உண்டோ
பண்கள் இல்லா பாக்கள் ஏது
பண்பாடு இல்லா தமிழர்கள் உண்டோ!

சதிகள் இல்லா அரசியல் ஏது
சந்தை இல்லா ஊர்கள் உண்டோ
விதிகள் இல்லா சட்டங்கள் ஏது
விழிகள் இல்லா காதலும் உண்டோ

---கே. அசோகன்

எழுதியவர் : கே.அசோகன் (12-Dec-16, 8:07 pm)
பார்வை : 200

மேலே