பல விகற்ப பஃறொடை வெண்பா உன்முகத்தைப் பார்த்திருந்தால் போதுமடி என்னன்பே
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
உன்முகத்தைப் பார்த்திருந்தால் போதுமடி என்னன்பே
என்மனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்கள் ஆயிரமே
சிந்தனையில் கோர்த்ததனை தித்திக்கும் செந்தமிழில்
மந்தகாசப் புன்னகையாய் தந்திடுவேன் வெண்பாவாய்
சீரடிக்கி நாளுமிர வில்
16-12-2016

