நம்பிக்கை
![](https://eluthu.com/images/loading.gif)
உதிர்ந்து விடுவோம்
என்று,
பழுத்த இலைகள்
ஒருபொழுதும்
கவலைகொள்வதில்லை.
உதிர்ந்த பின்
மண்ணிற்கு
உரமாவோமென்று
தெரிந்ததாலோ?
நான் மட்டும் ஏன்
தளர வேண்டும்?
உயிரது உதிரும்
வரை
நம்பிக்கையை
விதைப்பேன்
எனை சுற்றி
உள்ளோர்க்கு
உள்ள உறுதியோடு
நடைபோட..,
#sof_sekar