சீண்டாதே காளையன் வருகிறான்
சீண்டாதே. . . . .
காளையன் கிளம்புகிறான் . .
எங்களின்
நிழல் தொட்டு
கைகள் உயர்த்தி
நீயாக வெற்றி என்றாய். . .
நித்திரையில் கைசூப்பும்
குழந்தையென்று விட்டுவிட்டோம். . . .
மூடரென்று சொல்லி சொல்லி
புரியவைத்தோம் .. .
நீயோ வஞ்சனையால்
எங்களை
வாரி வாரி கொளுத்திவிட எண்ணுகிறாய். . .
எங்கள்
புருவ முடிச்சுகள் போதும்
தமிழனின் வீரத்தை மொழிப்பெயர்க்க. . .
உங்களின் வஞ்சனைகள்
புரிய புரிய . . .
அய்யகோ!
எங்களின் உணர்வுகள்
இதழ் விரித்து
ஏளனம் செய்கிறதே . .. .
அருத்துண்ணும் அரைகுறைகள் ஆணவமாய் களமிறங்கி...
கழுத்தருக்கும் கைகூலிகளின்
கூப்பாடுகள் எழுப்பிவிடுதே..
எங்கள் பாட்டன்களின் மரபனுவை
எங்களுள் . . .
புலித்தேவன் கைவாளும்
கண்முன்னே தெரியுதடா. .
பாண்டியனின் மீன்குறியும்
முரசுக்கொட்டி எழுப்புதடா. .
பாரதியின் கவியெல்லாம்
தசைகளைத்தான் முறுக்குக்குதடா . . .
ஏதோ
வள்ளுவரின் குறள்வந்து
பொறுமைக்கொள்ளுதடா. . .
எங்கள்
விளையாட்டில் கூட வினை செய்யாதீர். . .
நாங்கள் கடவுளை கண்டதில்லை
எங்கள்
தமிழ் தான் அனைத்தும். . .
மீண்டும் மீண்டும் சீண்டாதே
எங்கள் பண்பாட்டை ..
நாங்கள் காத்துவந்த தாய்மடியை
தாரை வார்க்க நாங்களென்ன
கலப்படமா. . . .
- காளையன் வரிகளில்
மருதுபாண்டியன். க