ஜல்லிக்கட்டு காளை

ஜல்லிக்கட்டுக்காக என்னை
வளர்த்த என் உறவுகள் இன்று
மத்திய அரசுடனும்
மாநில அரசுடனும்
என் உரிமைக்காக
மல்லுக்கட்டுகின்றன!

புல்லுக்கட்டு பக்கம் கூட
என்னை அழைத்து செல்லாத பீட்டா
இன்று அதனை எதிர்க்கின்றன!!

வந்தோரை வாழவைக்க தெரிந்த
என் தமிழனுக்கு
வளர்த்த என்னை
வாழவைக்க தெரியாமல் போகுமா?!

என் வளர்ப்பு வதையாக இருந்தாலும்
அதனை செய்யும் உரிமை
என்னை வளர்த்த என் தமிழனுக்கு
மட்டுமே உண்டு!!!

பாதி வழியில் வந்த
பீட்டாக்கு இல்லை!!

என்னால் வாய் திறந்து
பேச முடிந்து இருந்தால்
என்றே வாழ்த்து சொல்லி
இருப்பேன்
என் தமிழனுக்கு!!!

வாய் திறந்து பேச முடியாமல்
இருப்பதால்தான் இன்று வரையும்
வணங்கி வருகிறேன்!
என்னை வணங்கும்
என் தமிழர்களை...!

இப்படிக்கு
ஜல்லிக்கட்டு காளை

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Jan-17, 10:10 am)
பார்வை : 861

மேலே