உன்னெ நெனைச்சேன்
உன்னெ நெனைச்சேன்
வெளுத்து வச்ச சட்டபோட்டு
வெள்ளக்காரன் டையக் கட்டி
கல்வி முடிச்சி திரும்பையில
சான்றிதழாய் கைபிடித்த
காகிதநாற்கரத்தி ல்
காசுக்காய் நான் விற்ற..
கழனியதில் ஒன்னெ நெனைச்சேன்
கோவனத்தோடு உடலை மறந்து
தன்மானத்தோடு தன்நிலம் காத்த
என்தாத்தனே - உன்னெ நெனைச்சேன்
-மூர்த்தி