படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உடைமைகளை இழந்தாலும்
உயிரை இழக்கவில்லை
துளிர்க்கும் நம்பிக்கை !

மகளுக்கு இணையாக
நாயை நேசிக்கும்
உயர்ந்த உள்ளம் !

மழை வெள்ளத்திலும்
மெய்ப்பித்தார்
விலங்காபிமானம் !

எல்லாம் இழந்தபோதும்
இழக்கவில்லை
தன்னம்பிக்கை !

வாழ்வின் நிலையாமை
உணர்த்தியது
இயற்கை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Feb-17, 9:51 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 79

மேலே