கண்ணீர்

நீ விலைமதிப்பற்றவள் !!

பிறப்பின் விதை நீயே ....
உன் வரவேற்பு ஒரு சில நொடிகள் தாமதமாயினும்
படைத்தவனின் பிள்ளைகள்
நேர்கோட்டில் விளையாடுவான்??

வாழ்க்கையின் கடைசியில்
கனவுகள் கலைந்து போயினும்
விழிநீர்...... நீயே எனக்கு விளக்காய் இருக்கிறாய்

மீளா முடியா துன்பத்தில்
உன்னை அழைப்பேன்
நீ வரமாட்டாய்
எனக்கு அடைக்கலாம் தரமாட்டாய்

உடலில் நீர் வற்றி
உறைந்து கிடைக்கும் உன்னை
தழுவ என் விழிகள் ஏங்கும் அந்த நிமிடம்
வாழ்வே வேண்டாமென்று ஒவ்வொருவரும் வெறுக்கும் தருணம் ...

இன்பத்தில். அழையா விருந்தாளி நீ .....
துன்பத்தில் ,அழைப்பவனின் முதலாளி நீ

விழிகளில் உள்ள மெர்குரியே...
சோகத்தின் காதலியே
அழகிய பவள முத்தே
பெண்ணின் பேனாவே
தாமரை மேலுள்ள நீர் திரவியமே

உன்னை அழைக்கிறேன் நான்
இப்பொழுது
எப்பொழுது வருவாய் நீ ..

எழுதியவர் : prisilla (16-Feb-17, 10:48 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : kanneer
பார்வை : 153

மேலே