ஓர் காளையின் நட்பு கன்னியின் பார்வையில்

தனிமை என்ற ஊஞ்சலில்
பயணம் செய்த கன்னியிவள்
ஒரு காளையின் நட்பில்
காதல் கொள்கிறாள்

என்ன ஓர் ஆர்ப்பரிப்பு
என்ன ஓர் பூரிப்பு
அவர்களுக்கிடையில்

பார்த்துக்கொண்டிருந்த
என் விழிகளின் பாதையில்
தடங்கல் ஏற்படுத்த
தன உடலே தயக்கம் கொள்கிறது

அளவில்லா சந்தோசம்
அங்கே அவர்களை அணைத்துக்கொண்டு
அலைபோல அசைந்தாட செயகிறது

சின்ன சின்ன சிலுமிஷங்கள்
சிறகடிக்க
கொஞ்ச கொஞ்ச கோபங்களும்
கானல் நீராய் மறைகிறது

திடிரென்று ஓர் அமைதி
அந்த புன்னகைக்குஇடையில்

உற்று நோக்கினேன் ......

சிந்திக்க மறந்து சிரித்தேன் .....
சிறிய ஒரு வம்பு ...முரண்பாட்டின் நடுவில்
அதில் ஒருவன் செய்த குறும்பின் உச்சம் அது ??

மறுநிமிடமே மறைந்து போனது
அவர்களுக்குளே உதிர்ந்து போனது

என்ன ஓர் ஆச்சரியம்

மனதில் பாரமுமில்லை
மன்னிப்போ கேட்கவில்லை

அதிர்ந்து போனேன் நான் ....

கன்னியரோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை

இறைவன் படைப்பில்
இது நான் கண்ட
ஓர் அரிய சித்திரம்

நட்பின் சுவை
அறிய துடிக்கும் இவளுக்கு
இந்த நிகழ்வு
ஒரு அற்புத விருந்து போலிருக்கிறது

பல முகம் கொண்ட
ஆணின் குணத்தில்
இந்த பிம்பம்
என்னை உறைய வைக்கிறது

ஒரு ஆணின் நட்பு அபூர்வமானது
சுவைக்க சுவைக்க இனிமையானது
சுவைகளுக்குள்ளே அமிர்தமானது

இந்த கன்னியின் பார்வையில்
அது ஒரு அழகிய கவிதையானது ......

எழுதியவர் : prisilla (27-Feb-17, 7:24 pm)
பார்வை : 192

மேலே