அன்பே அன்பே

அன்பே ! அன்பே !

என்னவளே என் மன்னவளே
மனத்தில் பொன்னவளே
வெண்மை சாமரமே
தண்மை பூ முகமே
பெண்மை நளினமே
மென்மை இதயமே
தன்னவன் தனக்கே எனும்
தன்மை உருவமே

மஞ்சள் நிறமே
மணக்கும் சந்தணமே
கொஞ்சும் மொழியே
சுவைக்கும் கனியே
அன்பு பொங்கும் நுரையே
நெற்றி இளம் பிறையே

என் நெஞ்சின் உணர்வே
இங்கும் அங்கும் எங்கும்
என்னில் இதமாய் வீசும் தென்றலே

என் மனம் உடல்
வாழ்வு வளம்
என்றும் உன்னிடம் தஞ்சமடீ
என்
தேவை உன்னிடம் எப்போதும்
அன்பே ! அன்பே ! அன்பே!

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (11-Mar-17, 3:42 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 121

மேலே