அகரவரிசையில் ஆதிபகவன்
அகர வரிசையில் ஆதிபகவன்
அ அகிலத்துக்கு சொந்தக்காரன்
ஆ ஆண்டவன் என்ற பெயர் பெற்றவன்
இ இல்லை என்று சொல்பவரிடமும் இருப்பவன்
ஈ ஈரேழு உலகமும் அவன் வசம்
உ உயிரின் பொருளும் அவனே
ஊ ஊனில் முத்திரை பதிப்பவன்
எ எத்தனை ஜன்மத்திலும் நம்முடன் கலப்பவன்
ஏ ஏகாந்தத்தில் நிதர்சனமாய் தெரிபவன்
ஐ ஐஸ்வர்யம் அள்ளித் தருபவன்
ஒ ஒன்றுக்குள் ஒன்றாய் இருப்பவன்
ஓ ஓங்காரப் பொருள்தனை அறிந்தவன்
ஔ ஔஷதத்தை அமுதமாய் நினைப்பவன்
ஃ அஃதே ஆதிபகவன் ஆவான்