தகிப்பு

உன் ஆதரவோடு
பசுமையாய்

இருந்த
இப்பூமியை

ஏன் இப்படி
வதைக்கின்றாய்

உங்களுக்குள்
என்ன பிரச்சனை

உங்களுக்குள்
சமாதானம்

ஏற்பட்டாலொழிய
நாங்கள்

சந்தோஷமாக
இருக்க இயலாது.

பல ஆண்டுகளாக
நாங்கள்

இளைப்பாறவும்,
விளையாடவும்,

இடம் கொடுத்த

இம்மரத்தைப் பார்

இது மட்டுமா
இன்னும் நிறைய

இதைப் பார்த்தாவது

உன் தகிப்பை
நிறுத்திக்கொள்,

தகிக்கும் சூரியனும்
தன்நிலை

உணர்வான் என்று

இவ்வுலகிற்கு உணர்த்து ,
தவறுகளை மன்னித்து.
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (25-Mar-17, 10:11 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 240

மேலே