மென்மையே வாழ்வின் மேன்மை - சி எம் ஜேசு

கனிந்த பார்வையும்
கைகுலுக்கும் தோழமையும்

திறந்த சொல்லும்
பெருமையில்லாத வழி நடத்தலும்

நிறைந்த அன்பும்
குறைவில்லாத சேவையும்

மலர்ந்த முகமும்
மதி மயங்காத புகழும்

தெளிந்த செயலும்
தெய்வம் மகிழும் வாழ்வும்

இசைவினோடு இணைந்த
அசைவினோடு வாழும் மனிதமே

உன்னத உலகின்
மென்மைக்கான வாழ்வின் மேன்மை

எழுதியவர் : சி .எம் .ஜேசு (21-Apr-17, 6:29 pm)
பார்வை : 73

மேலே