நித்தம் காண்கிறோம் பூமியில்

கூரையும் அறைகளும் இல்லாத ​
பாதையோர இல்லம் அது ...
அறியாத வயதில் மழலைகள்
மூவர் அங்கே அருகருகில் ..
ஒட்டுப் போட்ட உடையிலும்
கிழிசல்கள் தெரியும் நிலையில் ..
உணவுப் பொட்டலம் ஒன்றுடன்
உலகையே வெறுத்தத் தாய் ..
பங்கிட்டு வழங்கினார் விரைந்து
பிள்ளைகள் பசிதீர பாசமுடன் ..
விழிநீர் முட்டியது இமையோரம்
துக்கம் பொங்கிட கூறினாள் ..
இதுதான் கிடைத்தது இன்று
முயன்றிடுக பசியாற என்று ..
இமயமாய் உயர்ந்து நிற்கிறாள்
இவ்வுலகில் தாய் இதனாலே ..
பட்டினி கிடந்தாலும் தான்
பெற்றவை வாழ நினைப்பவள் ..
கற்பனை எனினும் கவிதை
காட்சிகள் உண்டு சாட்சியாய் ..
நிகழ்வுகள் நிச்சயம் பார்வையில்
நித்தம் காண்கிறோம் பூமியில் ..

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Apr-17, 6:30 am)
பார்வை : 246

மேலே