தலைமைக்கு தேவை மனவுறுதி

பொறுமையற்ற மனிதன் உளிகள் விழுந்தும்
உருவம் மாறாதச் சிலைகள் போலாகும்...
மாறுவேன் எனும் மனவுறுதி இன்றேல்
பொறுமையும் அந்நேரம் வீணாய்ப் போகும்......

பூக்களைப் பறித்துப் பூமாலைத் தொடுக்கவும்
சொற்களைச் சேர்த்து பாமலை வடிக்கவும்
மனதில் உறுதி இல்லை யென்றால்
பூக்கள் உதிர்ந்து பாக்களும் பொருள்மாறுமே......

மற்றவர்களைப் புரிந்துக் கொண்டு நடப்பதிலும்
ஊக்கம் தந்து உயர்ந்திட வைப்பதிலும்
இதழவிழும் மொழியில் உறுதியில்லை யென்றால்
செய்கின்ற செயலும் பாதியிலே நிற்கும்......

மனமெனும் தோட்டத்தில் இலைகள் துளிர்த்தாலும்
பூக்கள் பூத்தாலும் காய்கள் காய்த்தாலும்
கனிகள் தந்தாலும் பறவைகள் வந்தாலும்
உறுதியான வேரில்லை யென்றால் வீழ்ந்திடுமே......





...கவியரங்க கவிதை...

எழுதியவர் : இதயம் விஜய் (3-May-17, 3:18 pm)
பார்வை : 121

மேலே