நானும் தான்
பகல் பொழுதில் நீ
என் தோள் சாய்ந்து உன்னோடு
பேசிக்கொண்டிருந்த
நிமிடங்களை
இரவின் பொழுதை முழுதாய்
உறக்கமின்றி நினைத்துக்கொண்டே
கழித்தேன் !
" நானும் தான் " என்று
நீயும் என்னிடம் சொல்லியபோது !
அக்கணத்தில்
"நம்காதல் " முழுமை அடைந்து இருந்தது !